நெருக்கமானவருக்கு தொற்று ஏற்பட்டால் 3 முதல் 5 நாள்களில் பரிசோதனை செய்ய வேண்டும் – ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலையின் நுண் உயிரியல் துறை பரிந்துரை!
Sunday, August 8th, 2021
கொரோனா தொற்று உறுதியான ஒருவருடன் நெருங்கிய தொடர்புடையவர்களுக்கு 3 முதல் 5 நாட்களுக்குள் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நுண் உயிரியல் துறை பரிந்துரைத்துள்ளது.
நோய் கட்டுப்பாட்டு நிலையத்தின் பரிந்துரை, சோதனைகளை மேற்கோள் காட்டி அத்துறையின் பணிப்பாளர், வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், முன்னதாக, கொரோனா பரிசோதிக்கப்பட வேண்டிய காலம் 5 முதல் 7 நாள்கள் வரை காணப்பட்டது என தெரிவித்துள்ளார்.
அறிகுறிகள் இருந்தால் அன்டிஜென் பரிசோதனையும், அறிகுறிகள் இல்லாதிருந்தால் பி.சி.ஆர். பரிசோதனையும் செய்வது நல்லது என்றும் சந்திம ஜீவந்தர தேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்.கல்வி வலயத்துக்கு நிரந்தர கல்விப்பணிப்பாளரை நியமிக்குமாறு கோரிக்கை!
விலை திருத்தம் குறித்து நாளைமறுதினம் அறிவிக்கப்படும் - லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தகவல்...
வடக்கில் இனி நீர் கட்டண பட்டியல் வழங்கப்படமாட்டாது - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவிப்ப...
|
|
|


