நெருக்கடி நிலை சில தினங்களில் நிவர்த்தி செய்யப்படும் – விசேட மருத்துவ நிபுணர் உறுதி!
Tuesday, May 4th, 2021
கொரோனா தொற்று அதிகரத்ததை அடுத்து நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் நெருக்கடி நிலை இன்னும் இரண்டு மூன்று தினங்களில் நிவர்த்தி செய்யப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் பத்து தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று நோயாளிகளாக இனங்காணப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் இத்தினங்களில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் எதிர்வரும் இரண்டு மூன்று தினங்களில் வைத்தியசாலைகளில் நிலவும் நெருக்கடி நிலைமை நிறைவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உள்ளூராட்சி தேர்தலை 2017 ஜூனுக்கு முன்னர் நடத்த முடியாது - இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்...
நாட்டின் ஒருமைக்கு பாதகமான அரசியலமைப்பை உருவாக்க இடமளிக்கப்போவதில்லை – ஜனாதிபதி!
குற்றவாளிகளை சிறையில் அடைப்பதனால் குற்றச்செயல்களை தடுக்க முடியாது - நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்...
|
|
|


