நெடுந்தீவு வைத்தியசாலைக்கு நிரந்தர மருத்துவர் நியமனம் !
Thursday, April 4th, 2019
நெடுந்தீவில் நிரந்தர மருத்துவர் ஒருவர் தற்போத நியமிக்கப்பட்டுள்ளார் என்ற யாழ்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது
இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
ஆண்டுதோறும் குறைந்த மருத்துவர்களே வடக்கிற்கு நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் விண்ணப்பித்த மாவட்டத்துக்கு ஏற்ப மருத்துவர் நியமனம் செய்யப்படுவர். நிரந்தர மருத்துவர்கள் இல்லாத நிலையில் சில மருத்துவமனைகள் இயங்குகின்றன.
நெடுந்தீவில் சேவையாற்றுவதற்கு மருத்துவர்கள் முன்வராத நிலையில் அங்கு நிரந்தர மருத்துவரை நியமிக்க முடியாதிருந்தது. தற்போது அங்கு ஒரு நிரந்தர மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
நெடுந்தீவில் நிரந்தர மருத்தவர் நியமிக்கப்படாது இருந்த போது, ஓய்வு பெற்ற மருத்தவர் ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றுவதற்கு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமெரிக்க கடற்படையினர் வழங்கிய ஒத்துழைப்புக்கு இலங்கை நன்றி தெரிவிப்பு!
கப்பலில் தீயைக் கட்டுப்படுத்திய இலங்கை, இந்தியா தரப்பினருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!
மக்கள் மீது எவ்வித வரிச் சுமைகளையும் ஏற்றாது, நாட்டின் வருமானத்தை 50 வீதமாக அதிகரிக்க முடியும் - நாட...
|
|
|


