நெடுந்தீவு பிரதேசத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆராய்வு!
Wednesday, January 11th, 2017
நெடுந்தீவு பிரதேசத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பாக கட்சியின் பிரதேச பொதுச்சபை உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்தனர்.
கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 2017 ஆம் ஆண்டு கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் கடந்த காலங்களிலும் தற்போது முன்னெடுக்கப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பாக பிரதேசத்தின் அனைத்து வட்டாரங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளுடன் ஆராயப்பட்டது.
இதன்போது கட்சியின் நெடுந்தீவு பிரதேச நிர்வாக செயலாளர் முரளி , பிரதேச நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டு கட்சியால் மேற்கொள்ளப்படவுள்ள எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக ஆராய்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது



Related posts:
அரசியல் அமைப்பு பேரவையின் இடைக்கால அறிக்கை அடுத்தமாதம் சமர்ப்பிப்பு!
புதிய வரிகள் எதுவும் அறிவிடப்படவில்லை - நிதி அமைச்சர் பசில் தெரிவிப்பு!
மாவட்ட அபிவிருத்தி சபைகளை மீண்டும் அறிமுகப்படுத்த தயார் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
|
|
|


