நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய கடலோர படையினரால் கைதுசெய்யப்பட்ட 18 கடற்றொழிலாளர்களும் விடுதலை!

Friday, October 25th, 2019

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய கடலோர படையினரால் கைதுசெய்யப்பட்ட 18  கடற்றொழிலாளர்களும் அந்திய நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இம்மாதம் 3 ஆம் திகதி நெடுந்தீவு கடலில் எல்லைதாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த வேளை இந்தியக் கடற்படையினரால் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 18 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களது விடுதலை தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் குறித்த கடற்றொழிலாளர்களது உறவுகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து இலங்கையிலுள்ள இந்திய தூதுவருடனும் தமிழ் நாட்டிலுள்ள இலங்கைக்கான துணைத் தூதுவருடனும் தாம் தொடர்புகளை ஏற்படுத்தி குறித்த பிரச்சினை தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பேச்சுக்களை மேற்கொண்டிருந்ததுடன் கடற்றொழிலாளர்களது விடுதலையை வரவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரஷ்பர நல்லிணக்க அடிப்படையில் மேற்கொள்ள முயற்சிகளை  மேற்கொள்ள முயற்சிப்பதாகவும் தெரிவித்திருந்தார்..

இந்நிலையில் குறித்த கடற்றொழிலாளர்கள் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: