நெடுந்தீவுக்கு வருகிறது நெடுந்தாரகை!
Friday, December 30th, 2016
வடக்கில் பயணிகள் சேவையல் ஈடுபடவுள்ள நெடுந்தாரகைப் படகு ஜனவரி 5ஆம் திகதி மாலை டொக்கியாட் நிறுவனத்தில் இருந்து புறப்பட்டு 9ஆம் திகதி குறிகாட்டுவான் துறையை அடையவுள்ளது. என வடக்கு மாகாண தலைமைச் செயலர் அ.பத்திநாதன் தெரிவித்துள்ளார்.
குறிகாட்டுவான் – நெடுந்தீவு இடையில் பயணிகள் சேவையில் ஈடுபடுவதற்காக உலக வங்கியின் நிதிப் பங்களிப்பில் நெல்சிப் திட்டத்தின் கீழ் 150 மில்லியன் ரூபா செலவில் புதிய படகு கட்டப்பட்டது. படகுக் கட்டுமானத்தை கொழும்பில் உள்ள படகுக்கட்டுமான நிறுவனமாக டொக்கியாட் நிறுவனம் மேற்கொண்டிருந்தது. 80 பயணிகள் பயணிக்கக்கூடிய போதிய வசதிகளுடன் புதிய படகு அமைக்கப்பட்டது. அதங்கான இயந்திரமும் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டு படகில் பொருத்தப்பட்டது.
கட்டுமானப் பணிகள் முடிந்துள்ள நிலையில் எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பு டொக்கியோட் நிறுவனத்தில் இருந்து கடல் மார்க்கமாக பயணித்து படகு யாழ்ப்பாணம் தலைமைச் செயலர் அ.பத்திநாதன் தெரிவித்ததாவது,
நெடுந்தாரகைப் படகின் 6 பணியாளர்களுக்கு எம்மால் கொழும்பு துறைமுக அதிகார சபையின் கீழ் உள்ள மாபொல நிறுவனத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. பயிற்சிகளை அவர்கள் நிறைவு செய்து யாழ்ப்பாணம் வந்துள்ளனர். அவர்களைச் செயன்முறைப் பயிற்சிகளுக்காக வடதாரகையில் இணைத்துக்கொள்ள ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. நெடுந்தாரகையை கொழும்பு டொக்கியாட் நிறுவனத்தில் இருந்து கடல் மார்க்கமாக யாழ்ப்பாணம் கொண்டுவர கடற்படையின் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தோம். அனுமதி கிடைத்துள்ளது – என்றார்

Related posts:
|
|
|


