நெடுந்தீவில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை – சந்தேக நபர்கள் தலைமறைவு – பொலிசார் தீவிர நடவடிக்கை!
Thursday, June 20th, 2024
நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுந்தீவு (07) ஏழாம் வட்டார பகுதியில் இன்று அதிகாலை கொலைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
இருவருக்கிடையே காணப்பட்ட முற்பகை காரணமாக நேற்று இரவு மது போதையில் கொலை செய்யப்பட்டவருக்கும் கொலை சந்தேக நபருக்கும் இடையே கொலை செய்யப்பட்டவரின் வீட்டிலே வாய்தர்க்கம் இடம் பெற்றதாகவும் அதன் பின்னர் அவரின் வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியில் இருவர் கொண்ட குழுவால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்
கொலை செய்யப்பட்டவர் நெடுந்தீவு 07 வட்டாரத்தைச் தேவராஜ் அருள்ராஜ் வயது 23 என்பவராவரார்
கொலை செய்யப்பட்டவர்அடி காயங்களுடன் நெடுந்தீவு 07ம் வட்டார பகுதியில் அடிகாயங்களுடன் சடலமாக. இன்று (20) அதிகாலை மீட்கப்பட்டு அதன் பின்னர் நெடுந்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
கொலை செய்யப்பட்டவரின் சடலம் தற்போது நெடுந்தீவு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
000
Related posts:
|
|
|


