நெடுந்தாரகை வரவால் தீவக மக்கள் மகிழ்ச்சி: நன்றி தெரிவித்து துண்டுப்பிரசுரம்!

Wednesday, January 11th, 2017

நீண்டகாலமாக யாழ்ப்பாணத்திற்கும் நெடுந்தீவுக்குமான பயணத்தின்போது பல அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்த நெடுந்தீவு மக்களுக்கு கடந்தகாலத்தில் பளுதடைந்திருந்த குமுதினிப் படகை  மீள்திருத்தம் செய்துதந்ததுடன்  வடதாரகை என்றும் படகையும் பெற்றுத்தந்து பயணத்தை இலகுபடுத்தியிருந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறித்த பகுதி மக்களின் பயணத்தினை மேலும் இலகுபடுத்தும் முகமாக தற்போது நெடுந்தாரகை என்னும் படகையும் பெற்றுத்தந்தமைக்கு நன்றி தெரிவித்து தீவக மக்களால் துண்டுப்பிரசுரங்கள் யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளது.

குறித்த துண்டுப்பிரசுரத்தில் –

தீவக மக்களின் இதய தெய்வமே…!

கேந்திர முக்கியத்துவமில்லாத பகுதிகள் என்று தீவகங்களும்,தீவகத்தில் வாழ்ந்த மக்களும் கைவிடப்பட்டிருந்த 1990 ஆம் ஆண்டுகளில் நாம் திக்கற்றவர்களாகவும் வாழ்வு மீதான நிச்சயமற்றவர்களாகவும் அடுத்தது என்ன நிகழும் என்று நாதியற்று இருந்தோம். அக்கால கட்டத்திலேயே தீவக மண்ணில் தனது தோழர்களுடன் வந்திறங்கிய எங்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நாங்கள் அறிமுகமானோம்.

தனது தோளில் எங்களுக்காக அரிசி மூடைகளையும். மா மூடைகளையும் சுமந்து எமக்கு உணவளித்தது மட்டுமல்லாது எண்ணற்ற பல உதவிகளை செய்துதந்த தலைவரையும், அவரது தோழர்களையும் தீவகத்தில் வாழும் நாங்கள் என்றென்றும் மறக்க மாட்டோம்.

எங்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தீவகத்தை பொறுப்பேற்ற பின்னர்தான், மின்சாரம் வழங்கி தீவகத்தை சூழ்ந்திருந்த இருள் விலகி ஒளி பிறந்தது. மேலும் மருத்துவமனைகள், பாடசாலைகள், போக்குவரத்து, குடிநீர் வசதிகளை பெற்றுத்தந்திருந்தார். அத்துடன் அரச திணைக்களங்கள் மற்றும் பல்வேறுபட்ட அபிவிருத்திகளுக்கும் புத்துயிர் கொடுத்;திருந்தார்.

நாங்கள் கௌரவமாக வாழும் சூழல் உருவாக்கப்பட்டது. நாங்கள் தடுக்கி விழுந்த தெருக்கள் காப்பற் வீதிகளாக புதுப்பொலிவுபெற்றது. றப்பர் காலணியுடன் எங்கள் தெருக்களில் எங்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தா எங்கள் தேவைகளைத் தீர்த்துவைக்க நடந்து வந்தார்.

தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பாதம் பட்ட ஒவ்வொரு பகுதிக்கும் மோட்சம் கிடைத்தது.

விஷேடமாக 1992ஆம் ஆண்டு நெடுந்தீவுக்கு தேவதூதனாக வருகை தந்து உயிர்ப்பலிகள் இல்லாமலும், இரத்தம் சிந்தாமலும், சிறு காயங்களும் ஏற்படுத்தப்படாமலும் எங்களை மீட்டெடுத்தார்.

குமதினிப் படகையும், சிறு படகுகளையும் வைத்துக் கொண்டு மிகுந்த ஆபத்துடனேயே நாம் யாழ். நகருக்கு பயணத்தை மேற்கொண்டிருந்தோம். எங்களின் பாதுகாப்பையும், பயண வசதியையும் கருத்தில் கொண்டு எங்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் “வட தாரகை” எனும் பாரிய பயணப் படகை எங்களுக்காகப் பெற்றுக் கொடுத்தார். வட தாரகையை சிரமமின்றி பயணிகள் பயன்படுத்துவதற்கு வசதியாக, நெடுந்தீவு இறங்குதுறையை ஆழமாக்கியும், புனரமைத்தும் கொடுத்தார். இப்போது 150 இலட்சம் ரூபாய் பெறுமதியில் கட்டமைக்கப்பட்டுள்ள “நெடுந்தாரகை” எனும் படகையும் எமக்குப் பெற்றுக்கொடுத்து உதவியுள்ளார்.

தீவகங்களின் அபிவிருத்திக்கும் மீள் எழுச்சிக்கும் காரணகர்தாவாக இருப்பவரும் எம்மீது குறையாத பற்றும், பாசமும் வைத்திருக்கும் எங்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு, எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்  என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

image-0-02-06-0242f555ed52c97454c6a255e454eb85dad1978708e2820d71d6b295e99a206f-V

image-0-02-06-feb53316768c4450a6acdf908ef2d0758be77d6ea1e0957854994989f4f9e678-V

IMG_20170111_142614

IMG_20170111_142614

IMG_20170111_142635

Related posts: