நூறு நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்திற்காக வருட வரவு செலவு திட்டத்தில் 600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது – நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!.

Tuesday, January 16th, 2024

நூறு நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்திற்காக இந்த வருட வரவு செலவு திட்டத்தில் 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த நிதியின் மூலம் 9 திட்டங்களின் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, கம்பஹா, மினுவாங்கொடை, பாணந்துறை, அலவ்வ, ஹொரண மற்றும் அவிசாவளை பொதுச் சந்தைகளின் அபிவிருத்தி, வரக்காபொல மற்றும் முல்லைத்தீவு பேருந்து நிலையங்களின் அபிவிருத்தி, நிந்தவூர் கடற்கரைப் பூங்கா நிர்மாணம் ஆகியன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனைக்கு அமைய இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: