நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் பணியாற்றும் 103 பேருக்கு கொரோனா தெர்றுறுதி – மரணங்களின் எண்ணிக்கையும் மீண்டும் அதிகரித்துவருவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை !

Wednesday, August 10th, 2022

கொரோனா மரணங்கள் ஆறு நேற்று (திங்கட்கிழமை) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி நாட்டின் கொரோனாவின் மரண எண்ணிக்கை 16,594 ஆக உள்ளது.

மேலும், நேற்று செவ்வாய்கிழமை 214 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் பதிவான மொத்த  கொரோனா எண்ணிக்கை 6667,158 ஆக உயர்ந்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நுரைச்சோலை லக் விஜய அனல் மின்நிலையத்தில் பணியாற்றும் 103 ஊழியர்கள் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்பிட்டி வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சீன பிரஜைகள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட அனைவரும் ஆலையில் வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட தொழிலாளர்கள் PCR பரிசோதனைகள் மேற்கொண்டு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

000

Related posts: