நீர் கட்டணத்தை செலுத்தாத பாடசாலைகளின் நீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டாம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவுறுத்து!

Friday, October 21st, 2022

நீர் கட்டணத்தை செலுத்தாத பாடசாலைகளின் நீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையிடம் தெரிவித்துள்ளார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் கட்டணங்களை செலுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவரிடம் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரின் உறுதிமொழியைத் தொடர்ந்து, பாடசாலைகளுக்கான நீர் இணைப்பைத் துண்டிக்காமல் இருக்க சபை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


சில கட்சிகளில் பெயரளவிலேயே பெண் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர் - கபே அமைப்பின் நிறைவேற்றுப...
கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்து விட்டதாக எவரும் எண்ணக் கூடாது - சுகாதார சேவை பிரதி இயக்குனர் எச்சரிக்க...
ஜூன் 7 வரை தளர்வுகள் இன்றி நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு - கொவிட் பரவல் தடுப்பு தேசிய செயலணி தலைவர்...