நீரை சிக்கனமாக பயன்படுத்தவும் – கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவிப்பு!
Wednesday, April 6th, 2022
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து மக்களின் நாளாந்த தேவைக்கு ஏற்ற அளவில் நீரை சுத்திகரித்து விநியோகிக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமையினை கருத்தில் கொண்டு எதிர்வரும் நாட்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிளிநொச்சி, முல்லைத்தீவு அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சிறப்பு ஏற்பாடுகள் சட்டம் நீடிக்கப்படும்!
அறிகுறிகளே இல்லாத கொரோனா நோயாளிகள் 9 கண்டுபிடிப்பு – கந்தக்காடு புனர்வாழ்வு நிலைய ஆணையாளர் தர்ஷன ஹெட...
நெடுஞ்சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் தரப்பினருக...
|
|
|


