நீரிழிவு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் பேரணி!

Tuesday, November 14th, 2017

இன்று உலக நீரிழிவு தினமாகும். உலகை அச்சுறுத்திவரும் நீரிழிவு நோயை கட்டப்படத்துவதற்கு விழிப்பணர்வை ஊட்டும் வகையில் யாழ்ப்பாணத்தில் நடைபவனி ஒன்று இன்றுகாலை இடம்பெற்றுள்ளது.

இன்று உலகில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள தொற்றாத நோய்களில் முக்கிய நோயான நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்று அவசியம் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நீரிழிவு நோய் தொடர்பாக மக்களை அறிவூட்டும் நோக்குடன் நீரிழிவு நோய் மாதமொன்றை பிரகடனப்படுத்தி நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார மருத்துவ அலுவலகங்களின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் அம்மாதத்தில் நாடளாவிய தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பணியகம், இலங்கை நீரிழிவு பேரவை ஆகியன இணைந்து இந்த நடைபவனி ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

Related posts:


வடக்கின் உற்பத்திகளுக்கு நியாயமான விலையில் நிறைவான சந்தை வாய்ப்பு. யாழில் விவசாய அமைச்சர் சஷிந்திர ர...
அரசியலில் எனது இறுதி நாட்களில் இருக்கிறேன் என்பதை நான் அறிவேன் - ஆனால் நிதி அமைச்சராக இருந்து செய்ய ...
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துங்கள் - துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில்...