நீரில் மூழ்கி ஒவ்வொரு வருடமும் 800 மரணங்கள் பதிவு – சுகாதார அமைச்சு தகவல்!

நாட்டில் நீரில் மூழ்குவதால் ஏற்படும் உயிரிழப்புக்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஒவ்வொரு வருடமும் 800 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்றா நோய் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் தற்செயலான அனர்த்தங்களால் மரணிக்கின்ற காரணிகளில் நீரில் மூழ்கி பலியாகின்றமை இரண்டாவது இடத்திலுள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் 21 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகளில் ஒரு அங்கமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பயண கட்டுப்பாடுகள் காரணமாக நீரில் மூழ்கி, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவியுயர்வு!
சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிப்பு!
இலங்கையின் கப்பல் போக்குவரத்து துறை அபிவிருத்திக்கு உதவி வழங்க தயார் - பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல்...
|
|