நீதிமன்றம் உத்தரவு – சீல் வைத்து மூடப்பட்டது யாழ்பொதுநூலக சிற்றுண்டிச்சாலை – காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த மேலும் 11 வர்த்தகர்களுக்கு அபராதம் விதிப்பு!

Friday, September 30th, 2022

செப்ரெம்பர் மாதம் யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகரிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து கடந்த 09.09.2022ம் திகதி யாழ் பொது நூலக சிற்றுண்டிச்சாலை பொது சுகாதார பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டது.

அதன்போது இனங்காணப்பட்ட குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டு நிவர்த்தி செய்ய கால அவகாசம் சிற்றுண்டிச்சாலை நடாத்துனரிற்கு வழங்கப்பட்டது. மீண்டும் பொது சுகாதார பரிசோதகரால் 28.09.2022ம் திகதி மீள் பரிசோதனை செய்த போது குறைபாடுகள் எவையும் நிவர்த்தி செய்யப்படாமல் இருந்தமை அவதானிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பொது சுகாதார பரிசோதகரால் சிற்றுண்டிசாலை நடாத்துனரிற்கு எதிராக யாழ் மேலதிக நீதவான் மன்றில் நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சிற்றுண்டிச்சாலை நடாத்துனர் குற்றச்சாட்டுகளை ஏற்றுகொண்டதையடுத்து 60,000/= தண்டம் நீதிமன்றால் விதிக்கப்பட்டதுடன், சிற்றுண்டிசாலையினை சீரமைக்கும் வரை சீல் வைக்குமாறு கட்டளையிட்டது. இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்களால் சிற்றுண்டிச்சாலை மறு அறிவித்தல் வரை சீல் வைத்து மூடப்பட்டது௪

இதனிடையே

செப்ரெம்பர் மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் யாழ் மாநகரசபை பொது சுகாதார பரிசோதகர்களால், மாநகரசபைக்கு உட்பட்ட பலசரக்கு கடைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது வண்ணார்பண்ணை பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் 10 பலசரக்கு கடைகளில் திகதி காலாவதியான பொருட்கள் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகரால் கைப்பற்றப்பட்டன,

அத்துடன் நல்லூர் பொது சுகாதார பரிசோதகர் பிரிவிலும் ஒரு கடையில் திகதி காலாவதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

மேற்படி கடை உரிமையாளர்களுக்கு எதிராக நேற்று யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர்களால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கினை விசாரித்த நீதவான் 11 கடை உரிமையாளர்களிற்கும் மொத்தமாக 185,000/= தண்டப்பணம் அறவிட்டு தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: