நிவாரண நடவடிக்கைக்கு சர்வதேச சாரணர் சங்கத்தின் ஆசிய பசுபிக் வலயம் அனுசரணை!
Thursday, June 1st, 2017
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சமூகத்திற்கு தேவையான மனிதாபிமான உதவிகளை செய்வதற்கு இலங்கை சாரணர் மத்திய நிலையம் துரித நிவாரண வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
பெரும்பாலான நிவாரண பொருட்கள் தற்பொழுது சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு கிடைத்துள்ளன.சர்வதேச சாரணர் சங்கத்தின் ஆசிய பசுபிக் வலயம் இதற்கு அனுசரணை வழங்கியுள்ளது. ஹோமாகம சாரணர் மாவட்ட சங்கத்தினால் சுமார் 70 இலட்சம் ரூபா பொருட்கள் மொறவக்க, கடுவல மற்றும் மாத்தறை ஆகிய பிரதேசங்களில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பிரதித்தலைமை சாரணர் ஆணையாளர் ஜனபிறீத் பெனான்டோ தெரிவித்துள்ளார்.
இதற்காக நன்கொடை வழங்குவதற்கு விருப்பம்கொண்டுள்ள சாரணர் அல்லது ஏனைய அனுசரணை வழங்குவோருக்கு சம்பந்தப்பட்ட நன்கொடைகளை இலங்கை சாரணர் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொருட்களை சேகரிக்கும் சாரணர் மத்திய நிலையத்தில் ஒப்படைக்க முடியும்.
Related posts:
|
|
|


