நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவேன் -கோட்டாபய ராஜபக்ச!

Thursday, October 3rd, 2019

யுத்தம் இல்லாத காலப்பகுதியில் சமூகத்தை பாதுகாப்பதில் பொலிஸார் மிக முக்கியமானவர்கள் என்றும் அவ்வாறான ஒரு பொலிஸ் சேவையை தமது அரசாங்கத்தில் உருவாக்க எதிர்பார்பதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொலிஸ் துறை தொடர்பில் தான் நன்கு அறிந்துள்ளதாகவும் அந்த துறையில் இன்று காணப்படும் பிரச்சினைகளை தீர்த்து எதிர்காலத்தில் சிறந்தவொரு பொலிஸ் சேவை ஏற்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

விஜயகுமாரதுங்க ஆரம்பித்த ஸ்ரீலங்கா மகா ஜன கட்சியின் சம்மேளன கூட்டம் இன்று எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் தலைமையில் குருணாகலையில் இடம்பெற்றது. அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான அசங்க நவரத்னவின் அழைப்பின் பேரில் இவர்கள் அந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், டுமுன்னாள் ஜனாதிபதி பொலிஸ் சேவைக்காக வழங்கப்பட்ட வாகனங்களும் தற்போதைய அரசாங்கத்தால் இல்லாது செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் சேவைக்குள் சிறந்த ஒழுகத்தை கட்டியெழுப்ப பயிற்சிகள் அவசியம்.  எனவே இன்று உள்ள பொலிஸ் சேவைக்குள் அவ்வாறான பயிற்சிகள் வழங்கப்படாது. ஆனால் எனது அரசாங்கத்தில் அதனை நிச்சயம் வழங்குவேன்.

இராணுவத்தில் இன்றுள்ள ஆள் பலம் அன்று காணப்படாமையால் யுத்தத்தை நிறைவு செய்ய 30 வருடங்கள் சென்றது. எவ்வாறான பொருளாதார நெருக்கடி நிலைமை காணப்பட்ட போதும் மஹிந்த ராஜபக்ஷ இராணுவத்தினரை மூன்று இலட்சமாக உயர்தினார்.

அந்த நிலைமை இன்று பொலிஸ் துறைக்கு ஏற்பட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் தேவையான அளவு அதிகாரிகளை அதிகரிப்பேன்.

தற்போதைய நிலையில் அரசியல் ரீதியில் தான் முன்னிலையில் இருக்கின்றேன். ஆகவே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து அதை முன்னேற்ற நடவடிக்கை எடுப்பேன்டு என்றார்

Related posts:


சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பம் - ஒரு வாரத்தில் நிறைவடையும் என எதிர்பார்ப...
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிதியுதவியுடன் 334 மில்லியன் ரூபா பெறுமதியான 10 திட்டங்கள் - சுற்றுச்சூழல...
நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு - நிறுவனத்தின் தலைவர் முதித்த ...