நிலவும் உலர்ந்த வானிலையில் மாற்றம் ஏற்படும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
நாட்டில் தற்போது நிலவும் உலர்ந்த வானிலையில் சிறிய மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதனடிப்படையில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஊரடங்குச் சட்டம் தளர்வை அடுத்து நாடுமுழுவதும் 4700 பஸ்கள் போக்குவரத்து சேவையில் - பொது போக்குவரத்து ...
கட்டாரில் சிக்கியிருந்த 26 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்!
தேர்தலை பிற்போட வேண்டிய தேவை ஆணைக்குழுவிற்கு கிடையாது - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|
|
தேங்காய்களின் விலை குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காட்டியிருந்ததாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவிப்...
நாட்டை முடக்காமல் கொரோனாவைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ச...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு - பலன்களை நுகர்வோருக்கு வழங்குவதற்கான ப...


