நிறைவேறியது அத்தியாவசிய சேவை சட்டமூலம்!
 Saturday, July 29th, 2017
        
                    Saturday, July 29th, 2017
            
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அத்தியாவசிய சேவை சட்டமூல வாக்களிப்பின் பொது கூட்டு எதிர்க்கட்சியினரால் குழப்ப நிலை ஏற்பட்டதன் காரணமாக சபை நடவடிக்கை எதிர்வரும் 4 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பெற்றோலிய உற்பத்தி, திரவ எரிவாயு உள்ளிட்ட சகல எரிபொருள் விநியோகங்களும் அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டு, ஜனாதிபதியினால் கடந்த செவ்வாய்க்கிழமை (25) நள்ளிரவு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
இதுதொடர்பில் இந்த விடயம் நேற்றைய தினம் விவாதிக்கப்பட்டு, இன்றைய தினம் இதன்மீதான வாக்களிப்பு இடம்பெற்ற வேளையிலேயே பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்ப நிலை ஏற்பட்டது. நேற்று (27) இடம்பெற்ற விவாதத்தை அடுத்து, அதற்கான வாக்கெடுப்பு நடாத்த தீர்மானிக்கப்பட்ட நிலையில், ஆளும்கட்சி சார்பில் மேலும் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசவுள்ளதாக தெரிவித்தனர், இன்றையதினத்திற’கு ; (28) வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        