நிர்ணய விலைமீறி அரிசி விற்பனை செய்த வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு!

Sunday, February 12th, 2017

பொருட்களை விற்பனை செய்யும் போது அவற்றின் விலைகளை காட்சிப்படு;த்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

கட்டுப்பாட்டு விலைக்கும் மேலாக  அரிசியை விற்பனை செய்த 30 வர்த்தக நிலையங்கள் நேற்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளன..  சில வர்த்தக நிலையங்பளில் விலையைக் காட்சிப்படுத்தாத முறைப்பாடுகள் நாளாந்தம் அதிகளவில் கிடைத்து வருகின்றன.

கடந்த 10 நாட்களில் கூடுதலான விலையில் பொருட்களை விற்பனை செய்தமை விலைகளை காட்சிப்படுத்தாமை போன்ற நுகர்வோர் சட்டங்களை மீறிய 670 வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

d446fe77385b4a9760fdff5aaddbae9f_XL

Related posts: