நிரந்தர குடிநீர் வசதியினை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் திருகோணமலை நல்லூர் கிராம மக்கள் கோரிக்கை!
Thursday, November 24th, 2016
தமது பகுதிக்கான நிரந்தர குடிநீர் வசதியினை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் திருகோணமலை நல்லூர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் நிர்வாகத்தினரால் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் குறித்த பகுதி மக்களது நிலைமைகளை ஆராய்ந்தறிந்துகொள்ளும் முகமான சென்றிருந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் திருகோணமலை மாவட்டப் பிரதிநிதியான புஸ்பராசா அவர்களிடமே குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதி அபிவிருத்திச் சங்கத்தினரால் வழங்கப்பட்ட மகஜரில் குடிநீர்வசதி , சுயதொழிலுக்கான வழ்வதார உதவிகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட மகஜரை பெற்றுக்கொண்ட புஸ்பராசா குறித்த கோரிக்கை தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


