நியமனங்களை தவற விடுகிறது வடக்கின் உள்ளுராட்சி அமைச்சு  – முன்பள்ளி ஆசிரியர்கள் கவலை!

Friday, March 10th, 2017

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் கீழ் உள்ள முன்பள்ளிகளில் பணிபுரிய உள்ள 41 ஆசிரியர்களை நியமிகக்கக்கூடிய வாய்ப்புத் தவறவிடப்பட்டுள்ளது என்று ஆசிரியர்கள் பலர் குற்றச்சாட்டுகின்றனர்.

வடக்கு மாகாணத்தின் கீழ் உள்ள உள்ளூராட்சி மன்றங்களால் பராமரிக்கப்படும் முன்பள்ளிகளில் ஆளணி அங்கீகாரமாக 41 ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் தற்போது 4 அசிரியர்கள் மட்டுமே நிரந்தர ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.

வடக்கில் தற்போது வேலையின்மை பெரும் பிரச்சினையாக காணப்படும் நிலையில் சந்தர்ப்பங்களை வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சு தவறவிடுகின்றது. இது தொடர்பான கடந்த ஆண்டின் முற்பகுதியில் சுட்டிக்காட்டப்பட்ட போது வடமாகாண நியதிச்சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில நியமனங்கள் வழங்கப்படும் என்றனர்.

இதுவரை நியமனங்கள் வழங்கப்படவில்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களைத் தவற விடுகின்றமையாலேயே வன்னிப் பகுதியில் 2000 வரையிலான முன்பள்ளி ஆசிரியர்கள் இராணுவத்தினரால் பராமரிக்கப்படும் முன்பள்ளிகளில் இணையும் அவலங்கள் நடக்கின்றன என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தற்போது கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது. காலதாமதத்துக்கு முன்பள்ளி நியதிச்சட்டத்துக்கான அனுமதியில் ஏற்பட்ட கால தாமதமே காரணம் தற்போது அது கிடைத்துள்ளது நியமனங்களுக்கான கடிதம் எழுதியுள்ளோம். அனுமதி விரைவில் கிடைக்கும். கிடைத்ததும் முறைப்படி விண்ணப்பங்கள் கோரப்பட்ட நேர்முகத் தேர்வுக்கமைய நியமனங்கள் வழங்கப்படும் என்ற வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் திருமதி. விஜயலக்சுமி தெரிவித்துள்ளார்.

Related posts: