நிபா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை – சுகாதார அமைச்சு அறிவிப்பு!
Sunday, October 1st, 2023
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பரவும் நிபா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது நிபா வைரஸ் தொற்று குறித்து மக்கள் மத்தியில் வீண் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிபா வைரஸ் பரவலை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பரவத்தொடங்கியுள்ள குறித்த வைரஸினால் அங்கு இதுவரை 700 ற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மக்களின் நிலங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் – தோழர் ஜீவன்
மனித உரிமைகள் தொடர்பிலான விவாதங்கங்கள் அரசியல் காரணங்களுக்கானதாக அமைந்துவிடக் கூடாது - ஐ.நாவிடம் சீ...
கொரோனா அதிகரித்து சென்றாலும் நாட்டை முடக்கப்போவதில்லை – ஜனாதிபதி தெரிவிப்பு!
|
|
|


