மக்களின் நிலங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் – தோழர் ஜீவன்

Friday, April 7th, 2017

மக்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே கட்சியின் கொள்கை வழிநின்று நாம் தொடர்ச்சியாக உழைத்து வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) தெரிவித்துள்ளார்.

வலிகாமம் வடக்கு மாவைகலட்டி காந்திஜீ சனசமூக நிலையத்தில் அதன் புதிய நிர்வாகிகள் மற்றும் பழைய நிர்வாகத்தினருடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்… யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த வேண்டும் என்பதில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார்.

நாம் மேற்கொண்டிருந்த இணக்க அரசியலுக்கூடாக யாழ். மாவட்டம் மட்டுமன்றி வடபகுதியின் பல பகுதிகளிலும் பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தது மட்டுமன்றி, படைத்தரப்பினர் வசமிருந்த 17 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை விடுவித்திருந்தோம். அத்துடன் எமது மக்களின் காணிகள் மக்களுக்கே கிடைக்க வேண்டும் என்பதை அரசிடம் தொடர்ச்சியாகவும் வலியுறுத்தி வருகின்றோம்.

அதுமட்டுமல்ல காணி விடுவிப்பு தொடர்பில் மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டங்களுக்கு எமது ஆதரவையும் தெரிவித்து வருகின்றோம்.

அதனடிப்படையிலேயே வலிகாமம் வடக்கு பகுதிகளை படைத்தரப்பினரிடமிருந்து விடுவித்து மக்களிடம் கையளிக்க வேண்டும் என்பதில் நாம் பல்வேறுபட்ட நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டிருந்தோம்.
இப்பகுதியின் அபிவிருத்தி;யிலும், மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் உழைக்க தயாராக இருக்கின்றோம் என்றும் ஜீவன் தெரிவித்துள்ளதுடன் சமகால விடயங்கள் தொடர்பாகவும் இங்கு தெளிவுபடுத்தினார்.

இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தெல்லிப்பளை நிர்வாகச் செயலர் ஜெயபாலசிங்கம் (அன்பு) உடனிருந்தார்.

Related posts: