இலங்கையின்  செயற்பாடு மிகவும் மந்த கதியில்!

Saturday, December 23rd, 2017

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் அண்டு செப்டெம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியிருந்த போதிலும் அந்தத்தீர்மானத்தின் மூலம் இலங்கை ஒப்பிய பொறுப்புக்களை நிறைவேற்றுவதிலான முன்னேற்றமானது மிகவும்  மந்த கதியிலேயே இருப்பதாக சர்வதேச மன்னிப்பச்சபை தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபையினால் நேற்று முன்தினம் புதன்கிழமை விடுவிக்கப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தத்தாமதமானது பலவந்தமான காணாமல் போதல்கள் சம்மந்தமான உண்மைக்கு உத்தரவாதம் அளிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை பாதித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது அந்த அமைப்பு, வடக்கு, கிழக்கில் காணாமல் போனோரின் உறவினர்கள் மாதக்கணக்கில் மேற்கொண்டுவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு இது வழிவகுத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

விரிவான இளப்பீடு கொள்கையொன்று உருவாக்கப்படும் என்றும் உலகளாவிய காலக்கிரம மீளாய்வு அமர்வின்போது கடந்த நவம்பர் மாதம் இலங்கை உறுதியளித்துள்ளது.

இந்தத்தீர்மானத்தின் கீழான தமது ஒப்பிய பொறுப்புக்களை அரசாங்கம் மேலும் குறிப்பிட்டிருப்பதுடன், காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தை செயற்ப்படுத்தல் மற்றும் உண்மை கண்டறியும் ஆணைக்குழு, இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் விசேட சட்ட ஆலோசகருடன் கூடிய நீதி பொறிமுறை அகியவற்றின் ஸ்தாபிப்பின் மூலம் தாம் ஒப்பிய பொறுப்புகளை நிறைவேற்றுவதாகவும் அது தெரிவித்திருந்தது.

உலகளாவிய காலக்கிரம மீளாய்வு அமர்வின் போதான  இலங்கையின் தன்னார்வ உறுதி மொழிகள் வரவேற்க்கப்படுகின்ற அதேநேரம், இருவருடங்களுக்கு முன்னதாக செய்வதாக உறுதியளித்ததற்கமைய இலங்கை அதனது மனித உரிமைகள் கடப்பாடுகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுடன், உண்மை நீதி, இழப்பீடு, மற்றும் மீள் நிகழாமை உத்தரவாதங்கள் தொடர்பான நடவெடிக்கைகளையும் ஆக்கபூர்வமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆகவே உண்மை. நீதி, இழப்பீடு, மற்றும் மீள்நிகழாமை உத்தரவாதங்கள் பற்றி தாம் ஒப்பிய பொறுப்புக்கள் தொடர்பில் தெளிவானதும் ஒருங்கிணைக்கப்பட்டதுமான திட்டமொன்றை அறிவிக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு கடந்த மே மாதம் விடுத்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாகவும் சர்வதேச மன்னிப்புச்சபை அதனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கையில் இழைக்கப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் ஏனைய குற்றங்களை விசாரிப்பதற்கும் ஒப்புக்கொள்வதற்கும் மற்றும் சட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்கும் இலங்கை அரசாங்கம் முன்னர் தவறியிருந்த சூழ்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான சர்வதேச விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை தமது 2016 ஆம் அண்டு அறிக்கையில் வலியுறுத்தியிருந்தது.

Related posts: