நித்தியவெளி பகுதி மக்களது நிலைமைகள் குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் நேரில் சென்று ஆராய்வு!

கஜா புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நித்தியவெளி பகுதி மக்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாகச் செயலாளரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வட மாகாண இணைப்பாளருமான கா வேலும் மயிலும் குகேந்திரன், யாழ் மாநகர சபை உறுப்பினர் றெமீடியஸ், மற்றும் றீகன் ஆகியோரே இவ்வாறு குறித்த பகுதிக்கு விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்தனர்.
கஜா என்னும் புயல்காற்று யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததுடன் அதிக மழைவீழ்ச்சியும் பதிவாகியிருந்தது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர். இந்நிலையிலேயே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் குறித்த பகுதிக்கு விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்திருந்தனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் தமது அடிப்படைத் தேவைகளான மலசலகூடம் சுகாதாரப்பிரச்சினை, காணிபிரச்சினை, வீட்டுத்திட்டம், வீதிபுனரமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
மக்களது கோரிக்கைகளை கருத்திற்கொண்ட முக்கியஸ்தர்கள் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனரமைப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து விவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வுகளை பெற்றுத்தருவதாக அமைச்சரின் இணைப்பாளர் கா வேலும் மயிலும் குகேந்திரன் தெரிவித்தார்.
Related posts:
|
|