நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அஞ்சத் தேவையில்லை – அமைச்சர் ராஜித சேனாரட்ன!
Thursday, February 16th, 2017
நாட்டின் சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்காக பாடுபடும் போது நிதி மோசடி விசாரணைப் பிரிவு குறித்து அஞ்ச வேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அஞ்சி ஒரு சிலர் தமது கடமைகளை மந்த கதியில் மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அஞ்சி செயற்பட வேண்டியதில்லை எனவும் அது தொடர்பான முழுப் பொறுப்பினையும் தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
நாடு முழுவதும் மும்மொழிகளில் அரச படிவங்கள்!
தாக்குதல் மேலும் தொடர வாய்ப்புள்ளது - பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை!
எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் இடைநிறுத்தப்படமாட்டாது - அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதி!
|
|
|


