நிதி ஒதுக்கப்பட்டிருந்தும் பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை – ஜனாதிபதி

பாடசாலைகளில் உட்கட்டமைப்பு மற்றும் சுகாதார மேம்பாடுகளுக்காக நிதி ஒதுக்கப்படுகின்றபோதும், அவை ஏன் மேம்படுத்தப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
10 பாடசாலைகளுக்கு சென்றால் 8 பாடசாலைகளில் மேசை, கதிரைகள் இல்லைமலசலக்கூடம் மற்றும் குப்பைக் கூடம் என்பன இல்லை. பாடசாலைகளில் மேசை கதிரைகள் என்பவற்றுக்குகூட ஏன் குறைபாடு நிலவுகின்றது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வருடாந்தம் ஒதுக்கப்படுகின்ற நிதியில் பாடசாலைகளுக்கு தேவையான மலசலக்கூடம் மற்றும் குப்பைக்கூடம் என்பவற்றை ஏன் அமைக்கவில்லை என்பதைக் தனக்கு கூறுமாறு ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Related posts:
உயர்தர தொழில் கற்கை நெறி: 2100 ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ள முயற்சி!
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வேலணை பிரதேச சபையால் பல்வேறு சுகாதார முன்னேற்பாடுகள் முன்னெடுப்பு!
6-9 தரங்களுக்கான கல்விநடவடிக்கை குறித்து இரண்டு வாரங்களில் முடிவு - இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம...
|
|