நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அமெரிக்கா பயணம்!

Wednesday, April 13th, 2016

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அரையாண்டு மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஐக்கிய அமெரிக்க குடியரசை நோக்கிப் பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் 17ஆம் திகதி வரை ஐக்கிய அமெரிக்க குடியரசின் வாஷிங்டனில் நடைபெறும் மாநாட்டில், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 187 நாடுகளின் நிதி அமைச்சர்களும் நிதித்துறையின் தலைவர்களும் பங்குபற்றுகின்றனர்.

இந்த மாநாடு இலங்கைக்கு மிக முக்கியமான ஒரு சந்தர்ப்பமாகும் என வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் தெரிவித்தள்ள நிலையில் .இலங்கையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அதற்கு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் பங்களிப்புக் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாநாட்டில் பங்குபற்றுகின்ற நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும், உலகின் முன்னணி நாடுகளின் நிதி அமைச்சர்களுக்கும் இடையில் பல சுற்றுப்பேச்சுகள் இங்கு இடம்பெறும்.அதேபோன்று ஜி-24 நாடுகளின் நிதி அமைச்சர்களின் கூட்டத்திலும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பங்குபற்றவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:

திங்கள்முதல் நாடு முழுவதுமுள்ள சதொச விற்பனை நிலையங்கள் - லங்கா சதொச நிறுவனத் தலைவர் நுசாத் பெரேரா அற...
கோணாவில் கிழக்கு ராஜன் குடியிருப்பு மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் குடிநீர்வசதி...
இருதரப்பு அரசியல் ஆலோசனைகளில் வலுவான கூட்டணியை இலங்கை மற்றும் ரஷ்யா மீள உறுதிப்படுத்தல்!