நிகழ்வுகளுக்கு செனட்டின் அனுமதி தேவை – அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல!

இனிவரும் காலத்தில் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளுக்கு செனட்டின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்படும் என உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் ஏதேனும் நிகழ்வுகளை நடத்த வேண்டுமாயின், பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியுடன் அவற்றை நடத்த வேண்டுமென தெரிவித்துள்ள அவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இது தொடர்பாக மாணவர்களுக்கு அறிவித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மோதலுடன் தொடர்புடைய மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Related posts:
பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது வாள்வெட்டு - விசேட அதிரடிப் படையினர் தீவிர தேடுதல்!
உணவுச் சட்டத்தை மீறிய ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
ராகுல் காந்திக்கு கிடைத்த தண்டனை ஏற்பாடுகளை உள்ளடக்கிய சட்டம் இலங்கையிலும் உருவாக்கப்பட வேண்டும் - ...
|
|