நாளை மதியத்திற்குள் பதவி விலக வேண்டும் – சொல்கிறார் முதல்வர்!
Wednesday, June 14th, 2017
ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள வடமாகாண சபையின் இரு அமைச்சர்களையும் தாமாகவே பதவி விலகுமாறு கோருகின்றேன் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதன்படி “வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா இருவரும் நாளை மதியத்திற்குள் தாமாகவே பதவி விலகக் கோருகின்றேன்”. என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விசாரணை அறிக்கை தொடர்பில் விவாதிப்பதற்காக வடக்கு மாகாண சபை இன்று கூடியுள்ளது. இதன்போதே குறித்த கோரிக்கையை முதலமைச்சர் முன்வைத்துள்ளார்.
Related posts:
இலங்கை வைத்திய சபை அவசரமாக கூடுகிறது!
நாடு முழுவதும் நாளைமுதல் மின்சார துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாது - இலங்கை மின்சார சபை அறிவிப்பு!
கிராமப்புற வசதிகளை மேம்படுத்த 20.6 பில்லியன் ரூபாய் செலவிட அரசாங்கம் தீர்மானம் - அமைச்சர் மஹிந்த அமர...
|
|
|


