நாளை அதிகாலை முதல் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க !
Saturday, September 21st, 2024
நாளடாவிய ரீதியில் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நாளை அதிகாலை முதல் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ பெறுபேறுகள் அதிகாரிகளால் வழங்கப்பட்டதன் பின்னர் ஆணைக்குழுவினால் பெறுபேறுகள் வெளியிடப்படு என ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
38 வேட்பாளர்களின் பெறுபேறுகளும் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என அவர் சுட்டிககாட்டினார்.
எவ்வாறாயினும் அதற்கு முன்னதாக தபால் மூல வாக்களிப்பு முடிவுகளை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் போட்டித்தன்மைக்கு அமைய முன்கூட்டியே பெறுபேறுகளை வெளியிடக் கூடாது. ஆணைக்குழு வழங்கும் உத்தியோகபூர்வ முடிவுகளை மட்டுமே வெளியிடுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
கடந்த ஏப்ரல் மாதம் கடலுக்கு சென்ற 6 மீனவர்கள் தொடர்பில் தகவலும் இல்லை?
159,92,096 பேர் வாக்களிக்கத் தகுதி - தேர்தல்கள் ஆணைக்குழு!
மின்சார சபை பொறியியலாளர் சங்கத்திற்கு 14 நாள்கள் தடை உத்தரவை பிறப்பித்தது கொழும்பு மாவட்ட நீதிமன்றம்...
|
|
|


