நாளைமுதல் வாக்காளர் அட்டை விநியோகம்!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளை(18) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இதேவேளை 19ஆம் திகதி முதல் பெப்ரவரி 4ம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
விசேட வாக்காளர் அட்டை விநியோக தினமாக எதிர்வரும் 28ம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதிக்குள் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாவிட்டால் அருகிலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியும் எனதிரு.ரத்னாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு திணைக்களம் கோரிக்கை!
பரீட்சார்த்திகள் அனைவருக்கும் நீதியும் நியாயமும் நிறைவேற்றப்படும் - பரீட்சைகள் ஆணையாளர்!
உலகளாவிய பதற்றங்களை அதிகரிக்கும் ஆத்திரமூட்டல்களை நாடுகள் தவிர்க்க வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமச...
|
|