நாளைமுதல் ரயில் சேவைகள் இடம்பெறும் – ரயில்வே திணைக்களம் தெரிவிப்பு!

நாளை திங்கட்கிழமை பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் மாகாணங்களுக்குள் ரயில் சேவைகள் மீண்டும் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி ஆறு பிரதான ரயில் மார்க்கம் ஊடாகவும் கரையோர மார்க்கத்தின் ஊடாக ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அடுத்த எதிர்வரும் புதன்கிழமை இரவு 10 மணிவரை ரயில் சேவை தொடரும் என ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.
கொழும்பில்) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு ஒரு கொள்கையில்லை!
நாளைமுதல் நெடுந்தூர போக்குவரத்தில் இறுக்கமான நடைமுறை பின்பற்றப்படும் - யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன...
பலத்த காற்று - இடியுடன் கூடிய மழை - வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்து வருவதாக வளிமண்டலவியல் த...
|
|