நாளைமுதல் மின் துண்டிப்பு நேரத்தில் மாற்றம் – காலை நேரத்தில் மின் துண்டிப்பு இல்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!
Sunday, June 19th, 2022
அடுத்துவரும் இரண்டு வாரங்களுக்கு காலை நேரத்தில் மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய, நாளை திங்கட்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையான காலப்பகுதியில் மின்விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரங்களில் இணைய வழியில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ள நிலையில், குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
எல்லை தாண்டிய 20 இந்திய மீனவர்கள் விடுதலை!
இணைய வசதிமூலம் பிறப்பு, இறப்பு, விவாகச் சான்றிதழ் வழங்கும் திட்டம் ஆரம்பம்
நாட்டில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களின் பணி நிலைமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட முற...
|
|
|


