நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை முன்வைத்ததும் இலங்கைக்கு உதவ சர்வதேச நாடுகள் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Wednesday, June 29th, 2022

நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை முன்வைத்ததும் இலங்கைக்கு உதவ அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் பங்களிப்புடன் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் இரண்டு, மூன்று வாரங்களுக்குள் அந்த வேலைத்திட்டத்தை முன்வைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்

மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர், வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை 2023 ஆம் ஆண்டு மீட்பதற்கும், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டை மீண்டும் பழையப்படி கட்டியெழுப்ப வெளிநாட்டு உதவிகள் தேவை என தெரிவித்துள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தற்போதைய வேலைத்திட்டம் தொடர்பில் அண்மைய நாட்களில் சில நாடுகளுடன் கலந்துரையாடிய போது அதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனவின் வீட்டுத்தோட்ட வேலைத்திட்டங்களுக்கு அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும். பெரும்பாலான அரச நிறுவனங்கள் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும், அவற்றை தொடர்ந்து இயக்குவது சிரமம் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: