நாட்டில் புதிய நீதிமன்றங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி!
Thursday, February 2nd, 2017
புதிய நீதிமன்றக் கட்டடங்களை நிர்மாணிப்பது தொடர்பில், நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
நீதிமன்றங்களுக்காக உள்ள கட்டடங்கள் மிகப் பழமையானவையாக இருத்தல், சனத்தொகையின் அதிகரிப்புக்கு ஏற்ப வழக்குகளின் எண்ணிக்கைகளின் அதிகரிப்பு, நீதிமன்றக் கட்டடங்களின் இடவசதிகள் போதுமானதாக இல்லாமை போன்ற பல்வேறு காரணங்களினால், புதிய நீதிமன்றக் கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான தேவை எழுந்துள்ளது.
அதனடிப்படையில், கம்பளை, ருவன்வெல்ல, மாங்குளம், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை போன்ற பிரதேசங்களில் காணப்படுகின்ற நீதிமன்றக் கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு, முன்னுரிமை பெற்றுக்கொடுத்து, புதிய நீதிமன்றத் கட்டடங்களை நிர்மாணிப்பது தொடர்பில், இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. இதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

Related posts:
|
|
|


