நாட்டில் டெங்கு தொற்று குறைவு!
Thursday, March 8th, 2018
2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் டெங்கு தொற்று 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவுதெரிவித்துள்ளது.
இருப்பினும் எதிர்வரும் இடைபருவ பெயர்ச்சி மழைக்காலத்தில் டெங்கு தெற்று அதிகரிக்கக் கூடிய அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் டெங்கு ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் தெரிவு செய்யப்பட்ட 9 மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதப்பகுதியில் 70 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
Related posts:
சுற்றாடலுக்கு பாதிப்பில்லாத வகையில் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவ...
இரசாயன உரத்திற்கு விலை சூத்திரம் - உணவு நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக...
யாழ். பேருந்து நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் – அடையாளம் கட்டி பெற்றுக் கொள்ளுமாறு பொலிசார் வேண...
|
|
|


