நாட்டில் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக 10 மாவட்டங்கள் அடையாளம்; அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார தரப்பினர் அறிவுறுத்து!
 Thursday, August 5th, 2021
        
                    Thursday, August 5th, 2021
            
நாட்டில் டெங்கு அபாயமிக்க 10 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தேசிய டெங்கு ஒழிப்பு பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் குறிப்பிட்டார்.
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுனார்.
ஜனவரி மாதம்முதல் இதுவரையான காலப்பகுதியில் 10 ஆயிரத்து 30 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, குருநாகல், இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை
ஆகிய 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        