நாட்டில் சீனிக்கு தட்டுப்பாடு கிடையாது – 75 ஆயிரம் மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!

Sunday, October 17th, 2021

நாட்டில் மக்களது நுகர்வுக்கு போதுமான அளவு சீனி உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

நாட்டில் சீனிக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றதா என ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் தற்போது 75 ஆயிரம் மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண சுட்டிக்காட்டியுள்ளார்

மாதமொன்றுக்கு 45 ஆயிரம் மெட்ரிக் தொன் சீனி மாத்திரமே நுகர்விற்கு தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிர்ணய விலையை விட அதிக விலைக்கு சீனி விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

130 ரூபாவிற்கும் அதிக விலையில் ஒரு கிலோ சீனி விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், பொதி செய்யப்படாத ஒரு கிலோவிற்கான அதிகபட்ச விலை 122 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிவப்பு சீனி ஒரு கிலோ 125 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணய விலைக்கு அதிக விலையில் சீனி விற்பனை செய்வோரை கைது செய்வதற்கு நாடளாவிய ரீயில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்க சலுகை வேலைத்திட்டம் - பதில் ஜனாதிபதி ரண...
பண்டிகைக் காலத்தை கருத்தில்கொண்டு சுற்றிவளைப்பு நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது - பொலிஸார் தெர...
ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகம் - ஜனாதிபதி ரணில் சந்திப்பு - முழுமையான ஆதரவை வ...