நாட்டில் சிறந்த முதியோர் இல்லமாக கைதடி அரச முதியோர் இல்லம் தெரிவு!

Friday, March 9th, 2018

முதியோருக்கான தேசிய செயலகத்தால் முதல்தர சிறந்த முதியோர் இல்லமாக கைதடி அரச முதியோர் இல்லம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அரச முதியோர் இல்லங்களைக் காட்டிலும் கைதடியில் உள்ள அரச முதியோர் இல்லம் முன்மாதியான சிறப்பு இல்லமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

முதியோருக்கான சிறந்த சேவைகள் சிறப்பு நிர்வாகக் கட்டமைப்பு போன்ற சகல வசதிகளுடனும் இந்த முதியோர் இல்லம் செயற்பட்டு வருகின்றது.

முதியோர் இல்லத்தை அடையாளப்படுத்தும் முகமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகமான பார்வையாளர்கள் கடந்த வருடத்தில் முதியோர் இல்லத்தைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

அதனைவிட பாடசாலை மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினர் அரச தனியார் திணைக்களப் பணியாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனப் பணியாளர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கடந்த காலங்களில் இருந்து தினமும் முதியோர் இல்லத்தைப் பார்வையிட்டு வருவதுடன் முதியோர் இல்ல வசதி, மூத்தோருக்கான பராமரிப்பு போன்ற நடவடிக்கைகளை பாடசாலை மாணவ சமூகத்தினர் நேரில் வருகை தந்து ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

மூத்தோரின் பராமரிப்பு அவற்றுக்கான சேவைகள் வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்துவதில் கைதடி அரச முதியோர் இல்லம் முனைப்புடனும் இருந்து வருவதாக இல்லத்தின் அத்தியட்சகர் த.கிருபாகரன் தெரிவித்தார்.

நாட்டில் சிறந்த முதியோர் இல்லமாக கைதடி அரச முதியோர் இல்லம் தெரிவு

Related posts:

திருகோணமலை வரோதயநகர் கந்தையா உள்ளக வீதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் செப்பனிடப்பட்டது...
உணவுப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல் - சிறுவர்களுக்கு போசணைக் குறைபாடு அதிகரித்து வருவத...
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பம் -...