நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 84 ஆயிரத்து 90 ஆக உயர்வு!

Saturday, June 12th, 2021

இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 789 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டது.

அவர்களில் 2 ஆயிரத்து 759 பேர் உள்நாட்டில் பல்வேறு இடங்களில் அடையாளம் காணப்பட்ட அதேநேரம், வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 30 பேருக்கும் கொவிட் தொற்றுறுதியாகி இருந்தது.

இதன்படி இலங்கையில் மொத்தமாக கொவிட் தொற்றுறுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 18 ஆயிரத்து 923ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம் நேற்றையதினம் 18 ஆயிரத்து 691 பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணிமனை தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டுப் பணிமனையின் அறிக்கையின் பிரகாரம் புத்தாண்டு கொத்தணியில் இதுவரையில் ஒரு இலட்சத்து 16 ஆயிரத்து 880 பேர் நோய்த்தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேலியகொடை கொத்தணியில் 82 ஆயிரத்து 785 பேரும், சிறைச்சாலை கொத்தணியில் 6 ஆயிரத்து 608 பேரும், 3,059 பேர் திவுலுபிட்டி கொத்தணியிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி இந்த நான்கு கொத்தணிகளில் அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 12 ஆயிரத்து 91 ஆக பதிவாகியுள்ளதுடன் நாடு திரும்பிய 4 ஆயிரத்து 562 இலங்கையர்களுக்கும், 326 வெளிநாட்டவர்களுக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அதேநேரம் கொவிட் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்த ஆயிரத்து 852 பேர் நேற்று சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறி சென்றனர். இதனடிப்படையில் குணமடைந்தோர் எண்ணிக்கையும் ஒரு இலட்சத்து 84 ஆயிரத்து 90 ஆகும் உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது 32 ஆயிரத்து ,848 பேர் சிகிச்சை மையங்களில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: