நாட்டில் காணப்படும் நடைமுறை பிரச்சினைகளுக்கு இரு மாதத்திற்குள் தீர்வு – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
Wednesday, March 2nd, 2022
நாட்டின் நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக் இன்னும் இருமாத காலத்திற்குள் தீர்வு பெற்றுக்கொள்ள முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல முழு உலக நாடுகளும் இப்பிரச்சினையை எதிர்க்கொண்டுள்ளது. இவ்வாறான நிலைமையில் இலங்கையின் தேசிய பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இந்திய பிரதமர் இலங்கை விஜயம்!
நிலச்சரிவு: பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்வு!
சங்குப்பிட்டியை அபகரிக்கும் வனவளத் திணைக்களத்துறை - குற்றச்சாட்டுகின்றனர் கடற்றொழிலாளர்கள்!
|
|
|


