நாட்டில் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் உதவி!

Friday, September 2nd, 2016

நாட்டில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு ஜப்பான் நிதி உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. நல்லிணக்கத்துடன் அபிவிருத்தி நோக்கிப் பயணிக்கும் இலங்கை  நிலக்கண்ணி வெடிகளற்ற நாடாக மாற்றியமைக்கும் நோக்கில் இந்த உதவி வழங்கப்பட உள்ளது.

நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு ஜப்பான் 864 லட்சம் ரூபாவினை வழங்க இணங்கியுள்ளது. வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலக்கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக இந்த உதவி வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பிலான உடன்படிக்கை இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தில் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கொனிச்சி சுகனுமாவும், ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் சிரேஸ்ட முகாமையாளர் எட்வர்ட் ரொபர்ட் சய்பிரட் ஆகியோரும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.நிலக்கண்ணி வெடி அகற்றும் மனிதாபிமான நடவடிக்கையின் ஓர் அங்கமாக இவ்வாறு உதவிகளை ஜப்பான் வழங்க உள்ளது.

Land-Mines

Related posts: