நாட்டில் ஒவ்வொரு நிமிடமும் இருவர் விபத்தில் சிக்குகின்றனர் – சுகாதார அமைச்சின் தொற்றாநோய்ப் பிரிவின் பணிப்பாளர்!

Saturday, July 7th, 2018

இலங்கையில் ஒவ்வொரு நிமிடமும் இருவர் விபத்துக்குள்ளாவதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது. திடீர் விபத்து காரணமாக நாளாந்தம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சின் தொற்றாநோய்ப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார்

நாளாந்த விபத்துக்களில் பலர் உயிரிழப்பதாகவும் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

வீட்டில் மற்றும் வீதி விபத்துக்களின் மூலமே அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வாகனத்தை செலுத்தும் போது கவனக்குறைவு, விபத்து சம்பவிக்கக்கூடிய பகுதிகளில் கவனக்குறைவாக செயற்படுதல் போன்ற சம்பவங்களே இவ்வாறான விபத்துக்கள் சம்பவிப்பதற்கான பிரதான காரணியாக அமைவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கவனக்குறைவு மற்றும் அவதானமின்மை தொடர்பில் சாரதிகள் கருத்திற்கொள்வதில்லை. விபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன்  செயற்படும் பட்சத்தில் விபத்துக்களைக் குறைத்துக் கொள்ள முடியும் எனவும் வாகனங்கள் செலுத்தும்போது கவனக்குறைவின்றி செயற்படுமாறும் வைத்தியர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் 18 இலட்சம் பேர் வீதி விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெறுவதாகவும் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts: