நாட்டில் உணவு தட்டுப்பாடு இல்லை : பின்னணியில் மாஃபியாவே உள்ளது என அமைச்சர் மஹிந்தானந்த குற்றச்சாட்டு!

நாட்டில் உணவுக்கான தட்டுப்பாடு இல்லை என தெரிவித்துள்ள கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே எவ்வாறாயினும் இந்த விடயத்தில் மாஃபியா ரீதியிலான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மக்களின் நலன்கருதியே அவசரகால விதிமுறை தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவசாயிகளிடம் குறைந்த விலையில் நெல் கொள்வனவு செய்யப்படுகின்ற போதிலும் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் நாட்டில் இராணுவ ஆட்சி இடம்பெறுவதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்ற போதிலும் அவ்வாறான செயற்பாடுகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சித்திரவதைகளுக்கு எதிரான சாசனம் இலங்கையில் அமுகம்!
ஆசிரியர் உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க திட்டம்!
ஆதாரமற்ற இட்டுக்கட்டப்பட்ட கதைகளில் தங்கியிருக்காமல் பரந்த கண்ணோட்டத்தில் பிரச்சினையை பார்க்க்கவேண்ட...
|
|