நாட்டில் இன்று தேசிய துக்கதினம்!
Sunday, March 13th, 2016
கண்டி – அஸ்கிரிய மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய கலகம ஸ்ரீ அத்ததஸ்சி தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று பூரண அரச மரியாதையுடன் நடைபெறவுள்ளது.
கடந்த 9ஆம் திகதி குளியல் அறையில் வழுக்கி வீழ்ந்த நிலையில், கண்டி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அத்ததஸ்சி தேரர் காலமானார்.
உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரரின் மறைவினை அடுத்து மஹாநாயக்க தேரராக தெரிவு செய்யப்பட்ட கலகம ஸ்ரீ அத்ததஸ்சி தேரர் 10 மாதங்கள் அப்பதவியை வகித்தார். உயிரிழக்கும் போது அவர்குக்கு 93 வயது. அவரது இறுதி சடங்கு அஸ்கிரிய காவற்துறை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இன்றையதினம் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
Related posts:
இன்று அமைச்சரவை மாற்றம்!
குடாநாட்டின் பல பகுதிகளில் கடல் நீர் உள்வாங்கல் : பதற்றத்தில் மக்கள்!
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என த.தே.கூட்டமைப்பு இனி கூறமுடியாது - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவிப...
|
|
|


