நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் நிலை!
Monday, June 5th, 2017
நாட்டில் அதிக மழை வீழ்ச்சி எதிர்வரும் தினங்களில் பதிவாகுமானால் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் நிலை தோன்றும் என எச்சரிக்கப்பட்டுள்ளது
விவசாய திணைக்களத்தின் பிரதானி ரஞ்சித் புணஸ்வர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்பெரும்போகத்தின் உற்பத்தியின் பொருட்டு அண்ணளவாக 6 லட்சம் ஹெக்டெயர் நெல் உற்பத்தி தேவைப்படுகின்றது
எவ்வாறாயினும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் காரணமாக 2 லட்சம் ஹெக்டெயர் அளவான நெல்லுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்
இந்தநிலையில் அரிசி தட்டுப்பாடு நிலை ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வாக வேறு உற்பத்திகள் தொடர்பில் விவசாயிகள் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் விவசாய திணைக்களத்தின் பிரதானி குறிப்பிட்டுள்ளார்
Related posts:
கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம்!
நாட்டின் எந்தப் பகுதியையும் முடக்கும் தேவை கிடையாதென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க...
நீர் கட்டணம் செலுத்துவதற்காக சலகை காலம் அறிவிப்பு!
|
|
|


