நாட்டிலுள்ள துறைமுகத்தின் பாதுகாப்பினை அதிகரிக்க நடவடிக்கை – அமைச்சர் சாகல!

Thursday, February 7th, 2019

அண்மைக் காலமாக நாடுமுழுவதும் மீட்கப்படும் போதைப்பொருள் மீட்புகளுடன், கொழும்பு துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளின் பாதுகாப்பினை அதிகரிக்குமாறு விடயதான அமைச்சர் சாகல ரத்நாயக்க இலங்கை துறைமுக அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலங்கை சுங்கம், பொலிஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களதும் பாதுகாப்பை பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் ஆணையத்தின் உத்தியோகத்தர்கள் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

நாட்டின் தற்கால நிலைமையின் படி, துறைமுகத்தினை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு திட்டங்கள் முன்னெடுப்பது காலத்தின் தேவை என்றும் அமைச்சர் சாகல ரத்நாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:


வரி நிவாரணங்களை மக்களுக்கு வழங்காத வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உ...
தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு வழங்கப்படும் - கொள்கை பிரகடன உரையில் ...
தமிழர்களுக்குத் தீர்வு வழங்க ராஜபக்சக்கள் தயாராகவே இருந்தார்கள் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே பின...