நாட்டிற்கு இயங்குநிலையில் உள்ள மாற்றங்களிற்கு உட்படுத்தக்கூடிய வலுவான பாதுகாப்பு கொள்கை அவசியம் – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண வலியுறுத்து!

இலங்கைக்கு வலுவான பாதுகாப்பு கொள்கை அவசியம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.
இயங்குநிலையில் உள்ள மாற்றங்களிற்கு உட்படுத்தக்கூடிய முழுமையான பாதுகாப்பு கொள்கை இலங்கைக்கு அவசியம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.
எப்போதும் மாறிவரும் சூழலை உள்வாங்ககூடிய அதற்கு ஏற்ற விதத்தில் செயற்படக்கூடிய முழுமையான பாதுகாப்பு கொள்கையே இந்த தருணத்தின் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சைபர் மற்றும் தகவல்தொழில்நுட்பத்திற்கான ஆபத்துக்களை சுட்டிக்காட்டியுள்ள அவர் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் இலங்கையில் அதிகரித்துள்ளன என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
திட்டமிடப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்தாவிட்டால் அதனால் சமூகத்திற்கு பாதிப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னொருபோதும் இல்லாத சவால்கள் காரணமாக வலுவான பாதுகாப்பு கொள்கையை ஸ்தாபிக்கவேண்டிய நிலைக்கு பாதுகாப்பு தரப்பினர் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|